Posts

Showing posts from November, 2017

"ஒவ்வொரு கலைஞனும் உருவாகுவதில்லை அவன் பிறக்கிறான்" தனது சினிமா பயணத்தை பகிர்ந்து கொள்கிறார் மைனா “பிரபு சாலமன்” :

"மைனா" வெற்றியின் மூலம் தனது அடுத்த படமான "கும்கி"க்கு இன்னும் அதிகமான பொறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்றிருக்கிறார் பிரபு சாலமன். இதற்கு இடையே அவரின் ”சினிமா பயணம்” குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து... உங்களை பற்றிய சிறு அறிமுகம்:நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே நெய்வேலிதான். அங்கே பள்ளிப்படிப்பை முடித்த நான், பின்பு திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டயப் படிப்பு முடித்தேன். பிறகு சினிமா மீதான எனது காதல் காரணமாக 1993 ஆம் ஆண்டு சென்னை வந்து இன்று வரை தொடர்கிறது எனது சினிமா பயணம். கனவுகளின் பட்டறையாக இருக்கும் சினிமாவுக்குள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்? ஒவ்வொரு கலைஞனும் உருவாகுவதில்லை அவன் பிறக்கிறான். ஆம்!. ஏதோ ஒரு தனித்துவமான திறமைகளை தன்னில் கொண்ட மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சுயம் என்று ஒன்று உள்ளது. அந்த வகையிலேதான் சினிமா மீதான என் காதலும் பற்றும். நான் சிறுவயது தொட்டே எதிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை போக்கை கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் நான் உட்பட நான்கு பிள்ளைகள் இருந்தாலும் ஏன் நான் மட்டும் இதை நோக்கி நக...

‘ செல்பீ ’ – முடிவு கட்டப்பட வேண்டிய பைத்தியக்காரத்தனம்

சமீபத்திய ஆய்வின் படி, சமூக வலைத்தளங்களோடு தங்களை ஐக்கியப் படுத்திக்கொண்டுள்ள டீன் பருவத்து இளைஞர், இளைஞிகள் 90 சதவீதம் பேர், செல்பீ எனப்படும் தன் பட பழக்கத்திற்கு ஆட்பவட்டவர்களாக இருக்கிறன்றனர். கேமராவை உயரமாக தூக்கிப்பிடித்து, கண்களை அகல விரித்து, கன்னங்களை உப்பி சுயமாக படம் எடுத்தால் அது செல்பீ எனப்படுகிறது. ஸ்டியோ சென்றுதான் அழகான படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையை மாற்றி, சாதாரண மனிதர்களையும் கதாநாயர்களாக கொண்டாட வைக்கும் கலாச்சாரத்தை வைக்கும் உருவாக்கிய பெருமை செல்பீயைச் சாரும். சமூக அடையாளம், படைப்பாற்றல், புகழ் என்று பல்வேறு தளங்களில் தன் பங்களிப்பை செல்பீ ஆற்றுவதாக சொல்லப்பட்டாலும், மறுபுறம் உறவு விரிசல், சுயநலம், மனநலக்கோளாறு, சமூகக் குற்றம், புகழ் வெறி ஆகியவற்றின் தலமாகவும் அது இருக்கிறது. செல்பீ என்றால் என்ன? உலகளாவிய கலாச்சாரமாக மாறியுள்ள அதன் உண்மை முகம் என்ன? அதன் கவர்ச்சிக்கு பின்னால் பொதிந்துள்ள மனோபாவம் என்ன? சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? விரிவாக படம்பிடிக்கிறது இந்த சிறப்புக்கட்டுரை.... செல்பீயின் வரலாற்றுத்தடம் 1839-ம் வருடத்தில் ராபர்ட் கோர்...

விஜய் ஆண்டனியுடன் ஒரு சந்திப்பு....

‘சலீம்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம், தற்போது தமிழகத்தின் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார் விஜய் ஆண்டனி. சினிமாத்துறையில் கால்பதித்து குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்த இவர், பாடகன், தயாரிப்பாளர், நடிகர் என்று தன் அடுத்தடுத்த பரிணமிப்பிலும் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார். பரபரப்பான ஒரு மாலை நேர சூழலில் விஜய் ஆண்டனியை சந்தித்தோம். உங்களைப் பற்றி, சினிமா பிரவேசம் பற்றி சொல்லுங்கள்... வளர்ந்தது படித்தது எல்லாம் திருநெல்வேலியில் தான்.. வறுமையான குடும்ப பின்னணியை உடையவன் நான். அப்பா இல்லாத நிலையில், அம்மா தான் அரசாங்க அலுவலகம் ஒன்றில் கிளர்க்காக வேலை பார்த்து என்னை வளர்த்தார். உண்மையை சொன்னால் எனக்கு படிப்பு ஏறவில்லை. அடுத்து என்ன என்று கேள்வி எழுந்தபோது, இயல்பாகவே என் பார்வை சினிமா மீது திரும்பியது. அதை குருட்டு உந்துதல் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போதைக்கு சினிமாத்துறையில் நுழைவதற்கு என் கண்களுக்கு தெரிந்த கதவு விஸ்காம் படிப்புதான். அம்மாவின் சம்மதில்லாமலேயே லயோலா கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு சென்ற பிறகுதான் சினிமாவிற்கு தேவையான திறமை போதவில்லை என்பது தெரிந்தத...

பழக்கம் – செயல்களை வசப்படுத்தும் ஓர் அரிய கலை

நம்மில் பலருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கக் கூடும். தினமும் அதிகாலை எழ வேண்டும்; உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும் ; வேலைகளை அன்றன்றே முடிக்க வேண்டும்; எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் என இப்படியாக பல நல்ல பழக்கங்களை உண்டாக்கிக்கொள்ள நமக்கு ஆசைதான். ஆனால், அவை வெறும் ஆசைகளாகவே இருந்து வருகின்றன. அதை செயல்படுத்துவது எப்படி என்கிற கலை நமக்கு வசப்பட மறுக்கிறது. இப்படி நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டிருந்து, ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் நீங்கள் தடுமாறிக்கொண்டிருந்தால் உங்களுக்கானதுதான் இந்தக் கட்டுரை... முதலில் பழக்கம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு செயலை தொடர்ச்சியாக அதே சமயம் இலகுவாக செய்வதற்கேற்ப நம் மனதையும், அறிவையும் வசப்படுத்துவதற்கு பெயர்தான் பழக்கம் என்று குறிப்பிடுகிறோம். என்றோ ஒருநாள் இரயிலுக்கோ, விமானத்திற்கோ செல்ல வேண்டும் என்பதற்காக நாம் அதிகாலையில் எழுந்திருக்கலாம். இன்டர்வியூ செல்வதற்காக குளித்துவிட்டு நல்ல சுத்தபத்தமான ஆடைகளை அணிந்து செல்லலாம். ஆ...

தினம் தினம் முஸ்லிம்களை தீக்குளிக்க கோரும் ராமர்களுக்கு மனம் திறந்த மடல்.

ராமனிடம் தன் புனிதத்தை நிரூபிக்க சீதை ஒருமுறைதான் தீக்குளித்தாள்... ஆனால் இந்திய முஸ்லிம்களோ தாங்கள் தீவிரவாதிகள் இல்லை என்பதை நிருபீக்க தினந்தினம் தீக்குளிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமியர்களுக்கு மனம் திறந்த மடல் எழுதும் அன்பர்களுக்கு எம் வேதனை கலந்த ஒரு பதில் மடல்... குரூர குண்டுவெடிப்புகளையும், பள்ளிக்கூட தாக்குதல்களையும் வெகுஜன முஸ்லிம்கள் ஆதரிப்பதாக இந்து உள்ளிட்ட பிற பெரும்பான்மை சமுதாயத்தினர் நினைத்துவிடக் கூடாது என்ற அக்கறையில், முஸ்லிம்கள் ஏன் இந்த தீவிரவாத சம்பவத்தை கண்டிக்கவில்லை, அந்த தீவிரவாத சம்பவத்தை கண்டிக்கவில்லை என்று ஆதங்கப்படும் அன்பர்களின் பதபதைப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இல்லை. சொல்லப்போனால்  அவர்களை விட எங்களுடைய பதைபதைப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்திய ராணுவத்தினரின் தலை பாகிஸ்தான் ராணுவத்தினரால் துண்டிக்கப்பட்டுவிட்டால், உலகில் எந்த மூலையிலேனும் எந்த தொய்பா அமைப்பாலேனும் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு விட்டால் நம் அலுவலகத்தில் கேள்வி கேட்பார்களே, நம் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் கேலி செய்யப்படுவார்களே, மனைவிமார்கள் அண்டைவீட்டார் ஏளன பார்வ...

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்

இன்டெர்நெட்டில் நம்மால் அதிகம் புழங்கப்படும் வலைத்தளம் எதுவென கேட்டால் இலகுவாக சொல்லிவிடலாம் கூகுள் என்று... காரணம் கூகுள் என்ற தேடல் இணையதளம் செய்த புரட்சி அத்தகையது. ஏதேனும் தேட, வாசிக்க, பொருள் வாங்க, சந்தேகம் தீர்க்க, பிள்ளைகளின் வீட்டு ஹோம்வொர்க்க செய்ய என்று ‘அ’ முதல் ‘ஃ’ வரை அத்தனையையும் ஒரு சொடக்கில் கொண்டு வந்து காட்டக்கூடியது கூகுள். ஆனால், கூகுளின் ‘குமிழ் வடிகட்டி’ தொழில்நுட்பத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளக்கூடும். கிணற்றுத் தவளைக்கு ஒப்பானதுதான் குமிழ் வடிகட்டி தொழில்நுட்பம். கிணற்றுக்குள் இருந்து கொண்டு கத்துகின்ற தவளைக்கு அதன் குரல் தவிர்த்து வேறு கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் எதிரொலி ஏற்பட்டு அவற்றினுடைய ஓசை மட்டுமே காதில் விழுந்துகொண்டிருக்கும். இந்த தவளைக்கு ஒப்பாகத்தான் கூகுள் பயனர்கள் ஆக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார் இன்டெர்நெட் செயற்பாட்டாளர் எலி பிரைசர். 2011 ஆம் ஆண்டு தனது புத்தகமான Filter Bubble: What the internet is hiding from You என்ற புத்தகம் மூலம் ‘குமிழ் வடிகட்டி’ (Filter Bubble) என்ற கோட்பாட்டை அவர் முன்வ...

திருட்டால் இருநாடுகளுக்கு இடையே வந்த சண்டை !

Image
திருட்டால், இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை வந்து பார்த்திருப்போம். ஏன் இரு ஊர்களுக்கும் இடையேகூட சண்டை மூண்டிருக்கும். ஆனால், இரு நாடுகளுக்கு இடையே பெரும் பகை தோன்றக் காரணமாக அமைந்துவிட்டது என்று சொன்னால், நம்ப முடிகிறதா? ஆம், ஒரு நகை திருட்டுச் சம்பவம், செளதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையே 20 ஆண்டுகளாக, தீராப் பகையை ஏற்படுத்தியிருக்கிறது. 1989ல், செளதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த, ஃபைசல் இப்னு ஃபஹத் என்ற இளவரசரின் வீட்டில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டெக்காமோங் என்பவர், வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். ஒருநாள், அரச குடும்ப நகைகளைத் திருடிக் கொண்டு, நாட்டை விட்டு ஓடிவிட்டார் அந்த டெக்காமோங். அவர் திருடிச் சென்ற நகைகளின் எடை 90 கிலோ. அவற்றுள் விலை மதிப்புமிக்க நீல வைரமும் அடக்கம். குற்றவாளியைக் கைது செய்த தாய்லாந்து அரசு, டெக்காமோங்கிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்து, செளதி இளவரசருக்கே மீண்டும் அனுப்பி வைத்தது. ஆனால், நகையைச் சரிபார்த்த இளவரசருக்கு, அதிர்ச்சியோ அதிர்ச்சி. பெரும்பாலும் போலி நகைகளே அனுப்பப்பட்டிருந்தன. மேலும், விலையுயர்ந்த நீலக்கல் வைரத்தையும் காணவி...

ஏன் இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள்தொகை அதிகம்?

Image
பொதுவாக, இந்தியாவின் பிரச்னைகளை பட்டியலிடுங்கள் என்று சொன்னால், பெரும்பாலானவர்கள் மக்கள்தொகை என்று சொல்வார்கள். உலக மக்கள்தொகையில், 36 சதவீதம் பேர் இந்தியாவிலும் சீனாவிலும் மட்டுமே உள்ளனர். அதாவது, இருநாடுகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை 260 கோடி. ஆனால், உலக நிலப்பரப்பில், இந்தியா மற்றும் சீனாவின் பங்கு வெறும் 8.2 சதவீதம் தான். குறைந்த நிலப்பரப்பில், எப்படி இவ்வளவு பெரிய மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட முடியும்? இதற்கு, உலகில் மற்ற நாட்டினருக்கு வாய்க்கப்பெறாத புவியியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கிடைத்ததே காரணம். வற்றாத நதிகள் அதிக மக்கள்தொகை உயிர் வாழ, நல்ல தண்ணீர், வளமிக்க மண் மற்றும் நல்ல சீதோஷ்ண நிலை தேவை. பெரிய நாகரிகங்கள் எல்லாம், நதிகளை மையமாக வைத்தே தோன்றியிருக்கின்றன. 10 நதிகள், அன்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களில் உறைந்து கிடக்கின்றன. 5 நதிகள் மழைக்காடுகளில் உள்ளன. உலகின் முக்கிய 7 நதிகளில், 4 இந்தியா மற்றும் சீனாவில் உள்ளன. (யாங்சே, மஞ்சள் நதி, கங்கை, பிரம்மபுத்திரா) உலகின் அதிக வளமிக்க இந்தோ–-கங்கை சமவெளிப் பரப்பின் அளவு 6.3 கோடி...

29 ஆண்டுகள் போரிட்ட ஒற்றை வீரர்

Image
இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிவடைந்தது. ஆனால், 1974ம் ஆண்டு வரை போரிட்ட ராணுவ வீரரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர்தான் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரூ ஒனோடா. இரண்டாம் உலகப்போர் முடிந்து 29 ஆண்டுகளாகியும், அது தெரியாமல், தொடர்ந்து போரில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். விந்தையான இந்நிகழ்வு, சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. ஜப்பானைச் சேர்ந்த ஹிரூ ஒனோடா, சீனா வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை செய்துகொண்டு இருந்தார். அவருக்கு 20 வயதான போது, ஜப்பான் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும்படி அழைப்பு வந்தது. நாட்டுக்குச் சேவை செய்யும் ஆர்வத்தில், ஒனோடாவும் சம்மதித்தார். உளவு பார்த்து, எதிரி நாட்டு தகவல்களைத் திரட்டும் பணியில் அவர் அமர்த்தப்பட்டார். மேலும், சிறு சிறு குழுவாக பதுங்கி, திடீர் தாக்குதல் நடத்தும் கொரில்லா போர் முறையிலும் அவருக்குச் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. அவரது பயிற்சி முடிந்த பிறகு, எதிரி நாடான பிலிப்பைன்சின் ஆளுகைக்கு உட்பட்ட லுபாங் தீவுக்கு, ஜப்பானிய அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டார். தளபதியின் கட்டளை ‘அங்கு ஏற்கனவே இருக்கும் நம் ஆட்களோடு இணைந்துகொள்ள வேண்டும...

உலகின் கனவு தேசம் - ஐக்கிய அரபு அமீரகம்

1. உலகின் உயரமான கட்டடம் எங்கு உள்ளது? 2. உலகின் மிகப்பெரும் செயற்கைத் தீவு எங்கு அமைந்துள்ளது? 3. கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் லம்போர்கினி, ஃபெராரி, பென்ட்லி போன்ற கார்களை, சாதாரண போலீஸ்காரர்களும் பயன்படுத்தும் நாடு எது? 4. தங்கக்கட்டிகளை வினியோகம் செய்ய, ஏ.டி.எம். மெஷின்களைக் கொண்ட நாடு எது? 5. ரோபோ போலீசை முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது? 6. உலகின் பெரிய ஆப்பிள் ஸ்மார்ட்போன் விற்பனை நிலையம், சீஸ்கேக் தொழிற்சாலை, காலணி விற்பனை நிலையங்கள் உள்ள நாடு எது? சந்தேகமே இல்லாமல், நம்பர் 7, குறுக்குச் சந்து விவேகானந்தர் தெரு, துபாய் அமைந்திருக்கும் ஐக்கிய அரபு அமீரக நாடுதான். அபுதாபி, துபாய், ஷார்ஜா, உம்மல் குவைன், ராசல் கைமா, அஜ்மன், ஃபுஜைரா என்று ஏழு அமீரகங்களை கொண்ட நாடுதான் ஜக்கிய அரபு அமீரகம். அரபு தீபகற்பத்தில், பாரசீக வளைகுடாவின் தென்முனையில் அமைந்திருக்கிறது ஐக்கிய அரபு அமிரகம் (யு.ஏ.இ.). இதன் எல்லைகளாக, ஓமன், செளதி அரேபியா. இதன் வரலாற்றை அறிந்துகொள்ள, இப்போதிருந்து 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம். அப்படியே போனால், யு.ஏ.இ.நாட்டில் என்ன தெரியும்? எதுவுமே தெரியாது... வெறும...

விமானத்திலிருந்து குண்டு வீசிய முதல் வீரன்

Image
காலந்தோறும் போர் செய்யும் முறைகள் மாறிக்கொண்டே வந்துள்ளன. கல்லை வைத்து, கவணை வைத்து, கத்தியை வைத்து, அம்பை வைத்து, துப்பாக்கியை வைத்து என்று மாற்றங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இந்த வகையில், விமானத்தில் இருந்து எதிரிகளின் மீது குண்டெறியும் முறையை அறிமுகப்படுத்திய ஓர் இளைஞனைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம். தற்போது, வெளிநாட்டுப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள லிபியா நாட்டில்தான், அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் அரங்கேறியது. அது 1911ம் ஆண்டு. வட ஆப்பிரிக்க நாடான லிபியா, ஓட்டோமான் துருக்கியப் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தது. அப்போது, லிபியாவை உரிமை கொண்டாடும் போட்டியில், துருக்கியப் பேரரசுக்கும், இத்தாலியப் படைகளுக்கும் சண்டை உக்கிரமாக நடந்தது. அப்போது, போர்க்களத்தில் விமானியாகப் பணியாற்றிய இத்தாலிய இளைஞன் கியூலியோ கவோட்டி, தன் தந்தைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான். ‘தந்தையே, நான் ஒரு புது முடிவை எடுத்துள்ளேன். இதுவரை ராட்சத பலூன்களில் இருந்து மட்டுமே குண்டுகளை எறிவது வழக்கம். இப்போது, நான் ஆகாய விமானத்திலிருந்து துருக்கியப் படைகள் மீது கு...

கொரியர்களின் கதாநாயகன்

Image
வெறும் 13 போர்க் கப்பல்களுடன், நூற்றுக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் கொண்டிருந்த ஜப்பானைத் தோற்கடித்த பெருமை கொண்டவர் யி சன் சின் (Yi Sun- Sin). கொரியாவின் கதாநாயகனாக கொண்டாடப்படும் இவரை, வரலாற்று ஆசிரியர்கள் வியப்புடன் பார்க்கின்றனர். தனது சிறப்புமிக்க போர் வியூகங்களால், ஆச்சரியமான வெற்றிகளை குவித்த யி சன் சின்னின் வரலாறு சுவாரஸ்யமானது.  உஷார்: கொரியாவில் இருந்த ஜோசுன் பேரரசு மீது (Josun Dynasty-) 1592ல் ஜப்பான் படையெடுத்தது. இந்தப் போரை ஜோசுன் பேரரசு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எந்த ஆயத்தமும் இல்லாததால், ஜப்பானியப் படைகளிடம் பெரும்பகுதிகளை இழக்க நேரிட்டது. ஆனால், யி சன் சின் இப்படியொரு படையெடுப்பு நிகழலாம் என்று முன்பே கணித்து வைத்திருந்தார். காரணம், ஜப்பானியப் படைத் தளபதியான டொயோட்டமி ஹிடயோஷி (Toyotomi Hideyoshi), சீனா மீது படையெடுக்க உள்ளதாகவும், கொரியா வழியாக படையை நகர்த்திச் செல்ல உள்ளதாகவும் அறிவித்திருந்தார். இதை ஜோசுன் பேரரசு, சீனாவுக்கு நேரப்போகும் ஆபத்து என்ற அளவில் மட்டுமே கருதியிருந்தது. ஆனால், கப்பற் படையில் புதிதாக இணைந்திருந்த யி சன் சின் என்ற இளைஞர், உஷார...

ஓநாயிடம் பால் உண்ட ரோம் நகர நிறுனவர்

Image
கி.மு. 753ல் ரோம் நாடு உருவாக்கப்பட்டது. ரொமுலஸ் மற்றும் ரெமஸ் ஆகியோர்தான், ரோம நகர அரசை நிறுவியவர்கள். இவர்களின் தந்தை, நுமிட்டர், இத்தாலி நாட்டில் ஆல்பா லங்கா என்ற பகுதியின் ஆட்சியாளராக இருந்தார். ரொமுலஸ் மற்றும் ரெமஸ் பிறப்பதற்கு முன்பே, அவர்களின் தந்தையை, சித்தப்பா அமுலியஸ் கொன்றுவிட்டான். ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட சித்தப்பா அமுலியஸ், நுமிட்டரின் மனைவியைச் சிறையில் அடைத்தான். அவருக்குச் சிறையிலேயே, ரொமுலஸ், ரெமஸ் என்ற இரட்டைச் குழந்தைகள் பிறந்தனர். எதிர்காலத்தில் நுமிட்டரின் வாரிசுகளால், தனது அதிகாரத்துக்கு அச்சுறுத்தல் வரலாம் என்று அச்சப்பட்டு, ரொமுலஸையும் ரெமஸையும் கொன்றுவிடும்படி உத்தரவிட்டான் சித்தப்பன் அமுலியஸ். இந்தப் பணி, ரகசியமாக அரண்மனை வேலைக்காரனிடம் கொடுக்கப்பட்டது. எனினும், குழந்தைகளைக் கொல்ல வேலைக்காரனுக்கு மனமில்லை. இதையடுத்து, மரக்கூடையில் இருவரையும் பத்திரமாக வைத்து திபெர் நதியில், போட்டுவிட்டான் வேலைக்காரன். அப்போது அங்கிருந்த அத்திமரத்தின் வேர்பகுதியில் மரக்கூடை சிக்கி, கரை ஒதுங்கியது. அங்கிருந்த ஓநாய் தான் அந்தக் குழந்தைகளுக்குப் பாலூட்டிக் காப்பாற்றியதாக...