விஜய் ஆண்டனியுடன் ஒரு சந்திப்பு....
‘சலீம்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம், தற்போது தமிழகத்தின் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார் விஜய் ஆண்டனி. சினிமாத்துறையில் கால்பதித்து குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்த இவர், பாடகன், தயாரிப்பாளர், நடிகர் என்று தன் அடுத்தடுத்த பரிணமிப்பிலும் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார். பரபரப்பான ஒரு மாலை நேர சூழலில் விஜய் ஆண்டனியை சந்தித்தோம்.
உங்களைப் பற்றி, சினிமா பிரவேசம் பற்றி சொல்லுங்கள்...
வளர்ந்தது படித்தது எல்லாம் திருநெல்வேலியில் தான்.. வறுமையான குடும்ப பின்னணியை உடையவன் நான். அப்பா இல்லாத நிலையில், அம்மா தான் அரசாங்க அலுவலகம் ஒன்றில் கிளர்க்காக வேலை பார்த்து என்னை வளர்த்தார். உண்மையை சொன்னால் எனக்கு படிப்பு ஏறவில்லை. அடுத்து என்ன என்று கேள்வி எழுந்தபோது, இயல்பாகவே என் பார்வை சினிமா மீது திரும்பியது. அதை குருட்டு உந்துதல் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போதைக்கு சினிமாத்துறையில் நுழைவதற்கு என் கண்களுக்கு தெரிந்த கதவு விஸ்காம் படிப்புதான். அம்மாவின் சம்மதில்லாமலேயே லயோலா கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு சென்ற பிறகுதான் சினிமாவிற்கு தேவையான திறமை போதவில்லை என்பது தெரிந்தது. அதற்காக தேங்கிவிட முடியுமா என்ன? ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் முதலிடம் வரப்போகிறார் என்று ஏற்கனவே நமக்கு தெரியும் என்பதற்காக, மற்றவர்கள் ஒன்பது பேரும் ஓடாமல் இருந்தால் அதை என்னவென்று சொல்வது? நானும் ஓடினேன். ஏதோ சுமாராக பாடத்தெரியும் என்பதால், அதை வைத்து இசையமைப்பளராக ஆகிவிட்டேன். இப்படித்தான் என் சினிமா பிரவேசம் நிகழ்ந்தது.
உங்கள் சமீபத்திய படமான ‘சலீம்’ மூலம் முக்கியத்துவம் வாய்ந்த சமூக கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு தயாரிப்பாளராக இப்படிப்பட்ட ரிஸ்க்கை உங்களால் எப்படி எடுக்க முடிந்தது?
ரிஸ்க் எடுத்ததாக நான் சொல்ல மாட்டேன். கைக்குழந்தை மெழுகுவர்த்தியின் தீபத்தை எப்படி அணுகும்? நெருப்பை தொட்டால் சுடும் என்கிற பிரக்ஞை குழந்தைக்கு இருக்குமா? அதே நிலைதான் எனக்கும். இப்படி இசையமைத்தால்தான் அது வணிக வெற்றி பெறும் என்று எந்த இசையமைப்பாளரை பார்த்தும் நான் கற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறுதான் சினிமா எடுக்க வேண்டும், அப்போதுதான் அது ஹிட் ஆகும் என்பதும் எனக்குத் தெரியாது. எந்த திட்டமிடலும், ஃபார்முலாவும் எனக்கு இல்லை. எந்த விபரமும் தெரியமால்தான் படத்தை தயாரித்தேன், நடித்தேன். என் மனதில் இருக்கின்ற கருத்தை, நான் சொல்ல விரும்பும் கருத்தை படம் என்கிற கதையாடல் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி சமூக செய்தி சொல்லும் கருத்துள்ள படத்தை தர வேண்டும் என்று வலிந்து செய்யவில்லை. எனக்கான சினிமாவை உருவாக்குகிறேன். அது மக்களுக்கு பிடித்திருக்கிறது.
தமிழ்திரைப்பட சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போன்று எதிர்மறையாக சித்தரித்து வரும் நிலையில், நீங்கள் மட்டும் கதாநாயகனை இஸ்லாமியனாக காட்டி, அவனது பெயரையே தலைப்பாக வைத்திருக்கிறீர்களே?
இது என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கிற வருத்த்த்திற்குரிய விஷயம். குமாரும், அப்துல்லாவும் சண்டை போட்டுக் கொண்டால், நீங்கள் அதை எப்படி சொல்ல வேண்டும்? குமாரும், அப்துல்லாவும் சண்டைப் போட்டுக் கொண்டார்கள் என்றுதானே!. ஆனால், பெரும்பாலான ஊடகங்கள் அவ்வாறு சொல்வதில்லை. இந்துவும், முஸ்லிமும் அடித்துக்கொண்டனர் என்று திசை திருப்புகின்றனர். சாதாரண விஷயங்கள் அரசியலாக்கப்படுவது என்பது மிகவும் தவறான போக்கு. ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை உடைக்கும் விதமாகத்தான் நான் அவ்வாறு செய்தேன்.
எந்த தீவிரவாத இயக்கம் என்று கேட்கும் காவல்துறையிடம் என் பேருதான் பிரச்சனைன்னா என்னை விஜய்னு கூப்பிடுங்க இல்ல ஆன்டனின்னு கூப்பிடுங்க என்ற வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல்கள் அள்ளுவதாக பல பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமா அதற்கு கைதட்டுகிறார்கள்? பெரும்பான்மையான ரசிகர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்தான். ஆக, ஏற்கனவே இச்சமூகத்தில் அடிமனதில் இருந்த ஒரு கருத்துக்குத் தான் நான் வடிவம் கொடுத்தேன். மக்களின், மக்களில் ஒருவனான என்னுடைய மனநிலையைத்தான் நான் அதில்பிரதிபலித்தேன்.
உங்கள் படங்கள் அனைத்தும் சமூகம் சார்ந்துதான் இருக்குமா?
என்னைப் பொறுத்தவரை நல்ல சினிமா என்பது ரசிகர்களை தங்களை மறந்து இரண்டரை தியேட்டரில் கட்டிப்போட வேண்டும். கோயிலில் கூட அவர்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அமருவதில்லை. ஆனால் தியேட்டரில் உட்காருகிறார்கள். குடும்பத்துடன் வருகிறார்கள் என்றால், அவர்களை மகிழ்விக்கும் ரீதியில் என் சினிமா இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், ரசிகர்களை ஈர்ப்பதற்காக தாழ்ந்த உத்திகளை கையாளக்கூட கூடாது. மக்களில் ஒருவனாக இருந்து என் மனதுக்குள் தோன்றும் விஷயங்களை எந்த கோணலும், சுளிவும் இல்லாமல் சரியாக படமாக்கும்போது ஆரோக்கியமான வெகுஜன சினிமாவாக மாறுகிறது. அந்த வகையில் என் படம் சமூகம் சார்ந்ததாகத்தான் இருக்கும்.
உங்கள் தொடர் வெற்றியின் ரகசியம் என்ன?
இந்த கேள்விக்கு, நான் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்த விஷயத்தையே இப்போது விலாவரியாக கூறுகிறேன். எனக்கு சினிமாவைப் பற்றி எந்த பெரிய அறிவும் கிடையாது. எப்படி இசை தெரியாமல் இசையமைப்பாளராக ஆனேனோ அப்படித்தான் நடிகனும் ஆனேன். பலர் உலக சினிமாக்களைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் எனக்கு அகிரா குரோசோவா படங்களோ, சத்தியஜித்ரே படங்களோ, கொரிய படங்களோ தெரியாது. ஏன், நான் தியேட்டருக்கு சென்று கூட என் சினிமாவுக்கான ரசிகர்களின் வரவேற்பு மற்றும் எதிர்வினையை அறிய விரும்புவது கிடையாது. காரணம், அவன் இந்த இடத்தில் இன்ன விஷயத்துக்காக எனக்கு கைதட்டுகிறான் என்று எனக்கு தெரியவரும்போது, அதுகுறித்த எதிர்பார்ப்புகள் எனக்குள் கட்டமைக்கப்படும். அந்த எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தில் என் செயல்பாடுகளில் எனக்கு மனத்தடை ஏற்படுத்தும். அதனால்தான் நான் உலக சினிமாக்களையும் பார்ப்பது கிடையாது. அவ்வாறு செய்யும்போது அதன் பாதிப்புகள் எனக்குள் ஏற்படலாம். பிறகு அது என் படமாக இருக்காது. இதுதவிர, ஒரு நடிகனாக நடிக்கும் போது நான் வீட்டில் கோபப்பட்டால் எப்படி கோபப்படுவேனோ, அழுதால் எப்படி அழுவேனோ அப்படித்தான் நடிப்பேன். அதைத்தாண்டி தேவைப்படாத எதையும் நான் செய்வதில்லை. என்னளவில் நேர்மையாக இயங்கிக்கொண்டே இருப்பதுதான் நீங்கள் குறிப்பிடும் வெற்றியாக மாறுகிறது. ஆனால், நான் எதையும் சாதித்ததாக எண்ணவில்லை.
இனி இசையமைக்க போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளீர்களே, ஏன் இந்த அதிரடி முடிவு?
நான் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்று எண்ணி இசையமைப்பாளாராக ஆகவில்லை. உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்றுதான் நான் முதலில் நினைத்தது. இப்போது ‘நான்’, ‘சலீம்’. ஆகிய படங்களின் மூலம் நடிகனாக அங்கீகரிப்பட்டிருக்கிறேன். பல முன்னணி இயக்குனர்கள் என்னை வைத்து படம் இயக்க முன்வருகிறார்கள். நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் தான், இசையமைப்பதை நிறுத்தி வைத்திருக்கிறேன். ஒருவேளை நாளை நான் இயக்குனராக கூட செய்யலாம். நடிகனாக என் மார்க்கெட் வீழ்ச்சியடையும்போது, அதை ஈடுகட்ட அந்த தளத்திற்கு மாறுவேன். எனக்கு இதுதான், அதுதான் என்பதெல்லாம் கிடையாது.

Comments
Post a Comment